|
VIP
Posts: 3,674
Join Date: Feb 2009
Rep Power: 5
|
கூவும் குயிலே நீ கொஞ்சம் நில்லு.... -
27th July 2010, 01:29 PM
கூவும் குயிலே நீ
-என்
மேவும் காதல் வேதனையை
அவரிடம் போய்ச் சொல்லு......
கண்களிலே கலந்து நாமும்
கருத்தொன்றிப் போனோம்
தண்ணொளியில் சுகித்திருந்தே
தாபம் பகிர்ந்து கொண்டோம்
யுத்தமேகம் சூழ்ந்ததம்மா
மனம் மறுகிப் போய்ச்சு
உயிர் காக்கப் புலம் பெயர்ந்து
செல்வதென்றும் ஆச்சு.........
மெத்தையிலே தூங்கிடவே
மேனியிலே முள்ளுக்
குத்துவதைப் போலத் தினம்
துன்பம் வந்து சேரும்
முத்தமிட்டு என்னைப் பிரிந்து
சென்றதன்பர் காதில்-மனம்
பித்தாகி உழன்று வரும்
சங்கதியைக் கூறு..........
கரங் கோர்த்து அவருடனே
பூமியெங்கும் சுற்ற
மனத் தாபம் விழியோரம்
நீரலையாய்ப் பொங்க
இலவு காத்த கிளியெனவே
ஏங்கிப் போனேன் நாளும்
விலகிடுமா இந்த இருள்
விரைவாய்க் கேட்டுச் சொல்லு......
|
|
|
|