|
VIP
Posts: 3,706
Join Date: Feb 2009
Rep Power: 5
|
கேரளத்து மீன் குழம்பு -
29th July 2010, 07:14 AM
தேவையானவை
- மத்தி மீன்(சிறிய சாளை) - அரை கிலோ
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- சீரகம் - கால் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- மிளகாய் -2
- பூண்டு - 4 பல்.
- இஞ்சி - சிறிய துண்டு
- தக்காளி - 1
- கொடம் புளி- ஒரு சிறிய துண்டு
- மீன் மசாலா ( ஈஸ்டன்)- 3 டீஸ்பூன்
- தேங்காய்ப்பால் - 1 கப்
- அரிசி மாவு - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்.
செய்முறை
- முதலில் மீனைச்சுத்தம் செய்து (சிறிய மீனாக இருக்கும், அதனை வாலில் இருந்து தலை நோக்கி செதிலை சுரண்டி எடுத்தால் வந்து விடும், தலையையும் வயிற்றோடு சேர்த்து அரிந்து கழித்து போட்டு விடவும்)உப்பு மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ளவும்.
- புளிக்கரைக்க வேண்டாம்.ச்அப்படியே துண்டாக போடலாம்.
- வெங்காயம்,ச்தக்காளி கட் பண்ணிக்கொள்ளவும்.ச்மிளகாய் கீறிக்கொள்ளவும்,ச்பூண்டை தட்டிக்கொள்ளவும். இஞ்சி பொடியாக கட் பண்ணவும்.ச்தேங்காய்ச்பாலுடன் அரிசிமாவை கலந்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வதங்கியவுடன், தக்காளி, உப்பு போட்டு மூடவும். தக்காளி மசிந்தவுடன் மீன் மசாலா பொடியை போட்டு தண்ணீர் சேர்த்து கொடம் புளியை போடவும்.
- மசாலா வாடை, புளி வாடை அடங்கியவுடன், மீனை போட்டு கொதிவந்து அடுப்பைக்குறைத்து விடவும். 5 நிமிடம் கழித்து தேங்காய்ப்பால் கலவையை விட்டு சிம்மிலேயே 5 நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து் விடவும். விரும்பினால் மல்லி இலை தூவி பரிமாறலாம்.
- கேரளத்து மீன் குழம்பு ரெடி.
|
|
|
|