Hi2 Forum  

Go Back   Hi2 Forum > General > Hi 2 Lounge

Reply
 
Thread Tools Display Modes
  (#1) Old
Mee244 Mee244 is offline
VIP
Mee244 is on a distinguished road
 
Mee244's Avatar
 
Posts: 3,674
Join Date: Feb 2009
Rep Power: 5
Default வித்தியாசமான தற்கொலை - 29th July 2010, 07:20 AM




எமதர்மராஜாவுக்கு கடிதம் எழுதிவிட்டு கோர்ட் வளாகத்தில் தற்கொலை: கோவையில் பரபரப்பு

கோவை கடலைக்கார சந்தைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றத்துக்கு வந்த சிலர், இதை பார்த்து விட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் பி4 காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சேகர் தனது பையில் ஒரு கடிதம் வைத்திருந்தார்.

சேகர் எழுதியிருந்த கடிதத்தில், அனுப்புனர், சேகர், த/பெ. ராமசாமி. பெறுனர், எமதர்மராஜா, த/பெ எமன் அப்பா, எமன் தருமன் வீதி, எமனின் செல்: 000321000, மேல் உலகம். சித்திரகுப்தன் செல் நம்பர்: 944561377.

என்னை பற்றிய மேலும் விபரங்கள் அறிய வேண்டும் என்றால் மேலே எழுதப்பட்டிருக்கும் செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும். இவ்வாறு சேகர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Reply With Quote
Sponsored Links
Reply

Bookmarks


Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 
Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump



Powered by vBulletin® Version 3.8.3
Copyright ©2000 - 2010, Jelsoft Enterprises Ltd.
vBulletin Skin developed by: vBStyles.com
Copyright © 2003 - 2010, Hi2world.com, License: VBF7ECAAD1